டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள்..!

The tractor rally was announced today due to rain as it was planned to be held yesterday. This is a preview of armchair activist Trump's rally

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின்  40 நாட்களுக்கு மேலாக கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழலிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் மழை காரணமாக இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும், குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள  டிராக்டர் பேரணிக்கு இது முன்னோட்டோம் என தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.