பயிற்சி விமானம் தீப்பிடிப்பு ..!அதிஷ்டவசமாக 6 பேரின் உயிர் தப்பியது..!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கானிப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கியது. அப்போது இந்த விமானத்தில் விமானி உட்பட 6 பேர் இருந்தனர்.
தரையிறங்கியபோது டயரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமானம் தடுமாறி விபத்து ஏற்பட்டது. அதிலிருந்த ஆறு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் உடனடியாக தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025