உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பாதிப்பு மத்தியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், டிரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், டிரம்ப் மற்றும் அவரது மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து விரைவாக மீண்டும் நல்ல ஆரோக்கியம் பெறவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
unknown node