முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது பல்வேறு நாடுகளை தன் வசப்படுத்தியுள்ள மிகப் பெரிய நோய் தான் கொரோனா. இந்த நோயினால், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இந்தியாவில் இதனை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக மற்ற மாநிலங்களில் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.
இதனையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேசிய நெடுச்சாலை வழியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நேற்று இரண்டு கண்டெய்னர் லாரி நுழைய முயன்றது. போலீசார் அந்த லாரிகளை மகாராஷ்டிராவின் யவட்மல் பகுதியில் தடுத்து நிறுத்திய டிரைவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், விசாரணையின் போது லாரி டிரைவர்கள் முன்னுக்குப்பின் முரனாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், கண்டெய்னரை திறந்து ஆய்வு செய்தனர். லாரிகளின் கண்டெய்னர்களை திறந்த போது அதன் உள்ளே 30-க்கும் அதிகமானோர் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கண்டெய்னரில் பதுங்கி இருந்தவர்கள் அனைவரும் தெலுங்கானாவில் இருந்து வந்தது, சொந்த ஊரான பஞ்சாப் செல்லவே இந்த பயணம் மேற்கொண்டதும் தெரியவந்தது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…