மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை போர் விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய்-30 ரக போர் விமானமும் மிராஜ்-2000 என்ற போர் விமானமும் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளன. புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே இரண்டு விமானங்களும் மொரேனாவில் உள்ள கோலாரஸ் அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் கீழே விழும் பொழுது விமானத்தில், விமானிகள் இருந்துள்ளனர்.
unknown nodeசுகோய் 30 (Su-30) போர் விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்ததாகவும் மிராஜ் 2000 விமானத்தில் ஒரு விமானி இருந்ததாகவும் மீட்பு துறையினர் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய இரண்டு விமானிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மிராஜ் விமானத்தில் இருந்த மூன்றாவது விமானி உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததாக மீட்பு துறையினர் மேலும் கூறினர்.
unknown nodeமத்திய பிரதேசத்தில் இந்த இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளான அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியிலும் விமானப்படையை சேர்ந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பயற்சியில் ஈடுபட்ட விமானங்கள் பனிமூட்டம் காரணமாக நடுவானில் மோதிக்கொண்டதா.?, ஏதேனும் தொழிநுட்ப கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பதை ஆராய இந்திய விமானப்படை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
unknown nodeஇரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து இந்திய விமானப்படைத் தலைவர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்துள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மொரேனாவில் உள்ள கோலாரஸ் அருகே விமானப்படையின் சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. விமானப்படையுடன் இனணந்து ஒத்துழைக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். விரைவான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள். விமானத்தின் விமானிகள் பத்திரமாக இருக்க நான் கடவுளைப் பிராத்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
unknown nodeunknown nodeunknown node