மும்பையில் இன்று இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
நாட்டில் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக மும்பையிலிருந்து ஷீரடி மற்றும் சோலாபூருக்கு செல்லும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் ரயில் மற்றும் மும்பை-சாய்நகர் ஷிர்டி வந்தே பாரத் ரயிலை, பிரதமர் இன்று மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். மும்பை-சோலாப்பூர் செல்லும் நாட்டின் 9-வது வந்தே பாரத் வந்தே பாரத் ரயில், சோலாப்பூரில் உள்ள சித்தேஷ்வர், அக்கல்கோட், துல்ஜாபூர், சோலாபூருக்கு அருகிலுள்ள பந்தர்பூர் மற்றும் புனே அருகே உள்ள ஆலண்டி போன்ற முக்கியமான புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பயணிக்க வசதியாக இருக்கும்.
நாட்டின் 10-வது வந்தே பாரத் ரயிலான மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயில், நாசிக் மற்றும் புனித யாத்திரை மையங்களான திரிம்பகேஷ்வர், சாய்நகர் ஷீரடி மற்றும் ஷானி சிங்கனாபூர் ஆகியவற்றுக்கான பயணத்தை இது மேம்படுத்தும். இது தவிர மும்பை மரோலில் உள்ள அல்ஜமியா-துஸ்-சைஃபியாவின் (தி சைஃபி அகாடமி) புதிய கல்வி வளாகத்தையும் பிரதமர் இன்று மோடி திறந்து வைக்கிறார்.<
unknown node