தொலைநிலைக்கல்வி பயிற்றுவிக்க யுஜிசி அங்கீகாரம் அவசியம் – யுஜிசி அறிவிப்பு

பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக்கல்வி பயிற்றுவிக்க யுஜிசி அங்கீகாரம் அவசியம் என்று யுஜிசி அறிவிப்பு.

பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக்கல்வி பயிற்றுவிக்க யுஜிசி அங்கீகாரம் அவசியம் என்று யுஜிசி அறிவிப்பு.

அதாவது, அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்த மற்றும் தொலைநிலை கல்வியிலும், ‘ஆன்லைன்’ வழியிலும், பட்டப் படிப்புகளை நடத்த யுஜிசியில் முறையான அங்கீகாரம் பெற வேண்டும். அதன்படி, வரும் 2023- – 24ம் கல்வியாண்டில், தொலைநிலைக்கல்வி பயிற்றுவிக்க மார்ச் 15 முதல் 31ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பித்த நகல்களை தபால் வாயிலாக ஏப்., 15க்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,https://deb.ugc.ac.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.