ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு.., புதிய காஷ்மீர்.! மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.!

பிரதமர் மோடி தலைமையில் புதிய காஷ்மீர் கட்டமைக்கப்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்முவில் உரையாற்றியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு நாளை ஸ்ரீநகரில் லால் சௌக் எனும் இடத்தில் உள்ள பார்தாப் பூங்காவில் தியாக நினைவு தூணை திறந்து வைக்க உள்ளார்.
அதற்கு முன்னதாக, இன்று ஜம்முவில் பாஜக கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அப்போது அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு வழங்குகிறது. பிரதமர் மோடி தலைமையில் புதிய காஷ்மீர் கட்டமைக்கப்பட்டு வருகிறது. என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்முவில் உரையாற்றியுள்ளார்.