சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை இல்லாத அளவு இந்த வருடம் ரூ.315 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளதாக தகவல்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகரஜோதியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள், கார்த்திகை மாதத்திலிருந்து விரதம் இருந்து தரிசனம் செய்ய வருவது வழக்கம், அதே போல் இந்த வருடம் சபரிமலை கோவிலின் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டதில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக ரூ.315.46 கோடி காணிக்கைகள் பெறப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை ரூபாய் நோட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாகவும், 3 அறைகளில் குவிந்துள்ள நாணயங்களை இன்னும் எண்ணுவதற்கு தொடங்கவில்லை எனவும் கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.