ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் உ.பி முதல்வர் ஆதித்யநாத்..!

உத்தரபிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பேருந்து சேவையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

உத்தரபிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பேருந்து சேவையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

உத்திரபிரதேசத்தின் தலைநகரம் லக்னோவை அனைத்து மாவட்டத் தலைமையகங்களுடன் இணைக்கும் புதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பேருந்து சேவையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பிரஜேஷ் பதக், உ.பி.யின் போக்குவரத்து துறை அமைச்சர் தயாசங்கர் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 76 ராஜதானி விரைவு பேருந்துகள் மற்றும் பல்வேறு வழித்தடங்களுக்கு 39 பொது பேருந்துகள் உட்பட 115 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இது தவிர, UP-RAHI என்ற ஆன்லைன் முன்பதிவு செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி, “ஹோலி பண்டிகையை முன்னிட்டு வந்துள்ள 150 பேருந்துகள், போக்குவரத்து கழகத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி என்றும் வரும் நாட்களில் மாநிலத்தில் உள்ள ஒரு லட்சம் வருவாய் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்கு போக்குவரத்து துறை செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.