18 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த உ.பி. ஆசிரியர் கைது..!

உ.பி-யில் 18 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கணினி ஆசிரியர் கைது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அருகேயுள்ள தில்ஹார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் அணில் குமார்.
இந்த நிலையில், இந்த பள்ளியில் கணினி ஆசிரியராக உள்ள முகமது அலி 18 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளித்ததற்காக பள்ளியின் முதல்வர் மற்றும் ஒரு உதவி ஆசிரியர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில், ஆசிரியர் முகமது அலியை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியர் அனில்குமார், உதவி ஆசிரியை ஷாஜியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, இருவரையும் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025