உத்திரப்பிரதேச மத மாற்ற எதிர்ப்பு சட்டம் – ஒரே வாரத்தில் 6 எப்ஐஆர் பதிவு!

In Uttar Pradesh, six FIRs have been registered in five districts so far within a week of the enactment of the anti-conversion law.

உத்திரபிரதேச மாநிலத்தில் மத மாற்ற எதிர்ப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட ஒரே வாரத்துக்குள் இதுவரை ஐந்து மாவட்டங்களில் 6 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத், வற்புறுத்துதல் மற்றும் பண மோசடி ஆகியவற்றால் மேற்கொள்ளப்படக் கூடிய மதமாற்றம் மற்றும் உடனடி திருமணம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத மாற்ற எதிர்ப்பு சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இந்த மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின்படி ஒரு இந்து மதம் அல்லது கிறிஸ்தவ மதப் பெண்ணை முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண் திருமணத்திற்காக மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அண்மையில் கூட இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இந்து முஸ்லிம் திருமணம் உத்திரபிரதேச மாநிலத்தில் காவலர்களால் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஒரே வாரத்தில் ஐந்து மாவட்டங்களில் 6 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டத்தின்கீழ் 29 பேர் மீது வழக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.