கேரளாவில் முதல் முறையாக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் வீணா ஜார்ஜ்...!

Veena George of the CPM has been elected as the new Health Minister of Kerala.

கேரளாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக சிபிஎம் கட்சியின் வீணா ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மே 20-ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ள நிலையில், சிபிஎம் கட்சி சார்பாக பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவிற்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில் கேரளாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக சிபிஎம் கட்சியின் வீணா ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சைலஜாவின் இடத்தில, இன்னொரு பெண் எம்.எல்.ஏ வீணா ஜார்ஜை தற்போது பினராய் விஜயன் தேர்வு செய்துள்ளார். இவர் முதன் முறையாக அமைச்சராக தேர்வாகியுள்ள நிலையில், இதற்கு முன்பதாக இவர் பத்திரிகைத் துறையில் 16 வருடங்கள் செய்தியாளராக இருந்துள்ளார். மலையாளத்தின் கைரளி, மனோரமா, இந்தியாவிஷன், நியூ டிவி என பல சேனல்களில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.