பிரணாப் முகர்ஜி மறைவிற்கு வெங்கைய நாயுடு இரங்கல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜி மறைவிற்கு  குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், பிரணாப் முகர்ஜி காலமானது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்தால் ஒரு மூத்த அரசியல்வாதியை நாடு இழந்துள்ளது. துயரமடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

unknown node