மணிப்பூரில் மீண்டும் வன்முறை... மேலும் 3 பேர் சுட்டுக் கொலை.!

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த வன்முறையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

manipur 3kill

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த வன்முறையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் கடந்த ஒருமாதத்திற்கு மேலாகவும் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. அங்கு கடந்த மே 3 ஆம் தேதி வெடித்த வன்முறையால் மாநிலத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் மெய்ட்டி இன மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்து மெய்ட்டி மற்றும் குக்கி சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இன்று அதிகாலை மீண்டும் இம்பாலில் இருந்து 70 கிமீ தொலைவில் லாங்சா மற்றும் சிங்லாங்மெய் ஆகிய பழங்குடி கிராமங்களில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து மணிப்பூரின் முதல்வர் பிரென் சிங், அந்தப் பகுதிக்குச் சென்று நேரில் பார்வையிட்டார். முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியிருந்த நிலையில், அதனை திரும்ப வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.