கவுஹாத்தியில் நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை..!

குழந்தைக்கடத்தல் வதந்தியால் இரண்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால்

குழந்தைக்கடத்தல் வதந்தியால் இரண்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் இன்று முதல் பொதுக்கூட்டங்கள் பேரணிகள் நடத்த போலீசார் தடைவிதித்துள்ளனர்.

கப்ரி ஆங்லாங்கில் 200க்கும் மேற்பட்டோர் குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகித்து நிலோட்பல், அபிஜீத் ஆகிய இரண்டு பேரை சரமாரியாக அடித்துக் கொலை செய்தனர்.

இச்சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது, பேரணியில் கற்கள் வீசப்பட்டதால் வன்முறை வெடித்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய தடியடியில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே குற்றவாளிகளில் 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.