ராம நவமி ஊர்வலத்தின் போது வன்முறை.. பாஜக எம்எல்ஏ காயம்! 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

ராம நவமி ஊர்வலத்தின் போது எம்எல்ஏ பீமன் கோஷ் தாக்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் தகவல்.

ராம நவமி ஊர்வலத்தின் போது எம்எல்ஏ பீமன் கோஷ் தாக்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் தகவல்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் நேற்று ராம நவமி ஊர்வலத்தின் போது இரு தற்புகளிடையே ஏற்பட்ட வன்முறையில் பாஜக எம்எல்ஏ பீமன் கோஷ் காயமடைந்தார். ராம நவமி ஊர்வலத்தின் போது குண்டர்களால் எம்எல்ஏ பீமன் கோஷ் தாக்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் கூறியுள்ளார்.

வன்முறை – 144 தடை உத்தரவு:

காயமடைந்த பாஜக எம்எல்ஏ பீமன் கோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வன்முறையை அடுத்து ரிஷ்ரா வார்டுகள் 1-5 மற்றும் செரம்பூர் வார்டு 24-இல் CrPC பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்ட நிலையில், இணை சேவைகள் துண்டிக்கப்பட்டது.

ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை:

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று ராம நவமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மசூதி அருகே ஊர்வலம் வந்தபோது கூட்டத்தின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. இந்த வன்முறையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று மேற்கு வங்காள ஆளுநர் சிவிஆனந்த் போஸ் அறிவுறுத்தியிருந்தார்.

இணைய சேவை நிறுத்தம் நீட்டிப்பு:

இதுபோல், ‘ராம நவமி’ பண்டிகையின் போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து நாலந்தா மாவட்டத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை இணைய சேவை நிறுத்தத்தை பீகார் அரசு நீட்டித்துள்ளது. வதந்திகளைப் பரப்புவதற்கு ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை அனுப்ப சில சமூக விரோத சக்திகள் இணைய சேவைகளைப் பயன்படுத்தக்கூடும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சசாரம் மற்றும் நாலந்தாவின் பீகார் ஷெரீப் வன்முறைகள் தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

unknown node