ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட விளம்பரங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் புதிய ஆலோசனை எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுவது போன்ற விளம்பரங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் புதிய ஆலோசனையை வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களின் பினாமி விளம்பரங்கள் உள்ளிட்ட விளம்பர இடைத்தரகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பார்வையாளர்கள் இந்த பெட்டிங், மற்றும் சூதாட்ட விளையாட்டுகளில் விளையாடத்தூண்டும் விளம்பரங்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தவில்லை, மேலும் இந்த விளம்பரங்களால் பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனால் ஊடக நிறுவனங்கள், ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் இந்த விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.
unknown node