தியேட்டரில் போஸ்டரை அகற்றும் போது தவறி விழுந்து உயிரிழந்த வாட்ச்மேன்.!

The watchman died after failing to remove a high-altitude poster at a theater in Bangalore.

பெங்களூரில் உள்ள தியேட்டரில் உயரத்தில் இருந்த போஸ்டரை அகற்றும் போது தவறி விழுந்து வாட்ச்மேன் உயிரிழந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள திரையரங்கில் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் உயரத்தில் இருந்த போஸ்டரை அகற்றும் போது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காலை 8.15 மணியளவில் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அந்த தியேட்டரின் உரிமையாளர் கூறுகையில், போஸ்டரை அகற்றுவது அவரின் வேலை இல்லை என்று கூறியுள்ளார். மேலும், தவறி விழுந்து இறந்த இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கர்நாடகாவின் பெங்களூர் டிசிபி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்டோபர் 15-ம் தேதி முதல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.