தடுப்பூசி திட்டம் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக மாறி வருகிறது -பிரதமர் மோடி பேச்சு

We are not only running the world's biggest vaccination drive but we are also the fastest in vaccinating our citizens: PM Narendra Modi

15 நாட்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி  மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அந்த வகையில் இன்று அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில்,இந்த ஆண்டும் நமது கடும் உழைப்பு வாயிலாக மனவுறுதியை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.நமது தடுப்பூசி திட்டம் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக மாறி வருகிறது.

15 நாட்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிற்கு 18 நாட்கள் பிடித்துள்ளது.நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் யோகக்கலையிடம் இருக்கும். வல்லமை பார்த்த மக்கள் தற்போது யோகக்கலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என்று பேசியுள்ளார்.