நாங்கள் சதம் அடிக்கிறோம்.. எதிர்க்கட்சிகள் நோ பால் வீசுகிறார்கள் – பிரதமர் மோடி பேச்சு

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நம்பிக்கையில்லா

pm modi lok sabha

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருக்கிறது. ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. எதிர்க்கட்சிகள் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது.

வருடம் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர். நாங்கள் சதம் அடிக்கிறோம், எதிர்க்கட்சிகள் நோ பால் வீசுகிறார்கள். ஒருமுறை நோ பால் போட்டால் பரவாயில்லை, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப நோபாலை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நோபால் போடுகிறீர்கள் நாங்கள் சிக்ஸர் அடிக்கிறோம் செஞ்சுரி அடிக்கிறோம். கொஞ்சமாவது தயாராக மாட்டீர்களா என பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை நோக்கி கிண்டலாக பேசினார்.

5 ஆண்டு அவகாசம் கொடுத்தும் எதிர்க்கட்சிகள் எந்த முன்னெடுப்பு, செய்யாமல் நோ பால் வீசுகிறார்கள். நாட்டுக்கு ஏமாற்றத்தை தவிர நீங்கள் வேறு எதையும் செய்யவில்லை. கட்சியை விட தேசம் முக்கியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யக்கூடாது. கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள். விமர்சனம் செய்வதில் மிக கீழ் தரமான நிலையை எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை, வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன்.  மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல் நாளில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசாதது ஏன்? எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். நாங்கள் இப்போது செய்யும் காரியங்கள் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும்.

பாஜகவுக்கு இந்திய இளைஞர்கள் மீது நம்பிக்கை உள்ளது. இளைஞர்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்றார். மேலும், எனது மூன்றாவது முறை ஆட்சியின்போது இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும். அப்போதும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருப்பார்கள் எனவும் விமர்சித்தார்.