துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம்- விவசாயிகள் ..!

We will not leave this place even if there is firing - farmers ..!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 2 மாதங்களாக போராடிவருகின்றனர். கடந்த 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து  ஏறக்குறைய 5 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நடந்தது சம்பவம் போன்று உத்தரபிரதேசத்திலும் நடந்து விடக்கூடாது என்பதற்க்காக உத்தரபிரதேச அரசு காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகள் அகற்ற முடிவு செய்தது. ஆனால், காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அந்த இடத்தை காலி செய்யுமாறு உத்தரபிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால், உத்தரபிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு பாரதிய கிசான் யூனியன் வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், நாங்கள் எங்கையும் போகமாட்டோம் இங்குதான் இருப்போம், போலீசார் என்ன நடவடிக்கை வேண்டுமெனலும் எடுத்து கொள்ளட்டும், போராட்டத்தை கலைக்கமுடியாது என தெரிவித்தார். மேலும், மூன்று விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை பல விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தொடர வேண்டும் என கூறினார்.

நாங்கள் லாத்தி அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று ஒரு விவசாயி கூறினார். தற்போது காசிப்பூர் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.