பரபரப்பு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்!

West Bengal Chief Minister Mamata Banerjee has been pushed by 4-5 people and has reportedly injured her leg. She complained.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை 4-5 பேர் சேர்ந்து தள்ளி விட்டதாகவும், இதனால் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் திரிமுனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி, கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.அவருக்கு நந்திகிராம் பகுதியில் பெரும் செல்வாக்கு உள்ளதால், அந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதாக பாஜக அறிவித்தது.

அதனைதொடர்ந்து மம்தா, அதே தொகுதியில் தாமும் போட்டியிடவுள்ளதாக அறிவித்து, வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு பின் காரை நோக்கி செல்லும்போது 4-5 பேர் அவரை தள்ளி விட்டதாகவும், இதனால் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.