பிரதமர் மோடி என்ன செய்கிறார்...? மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு தலைமை தாங்குகிறார்....! – சீதாராம் யெச்சூரி

What Prime Minister Modi is doing is leading the task of wiping out more people than ever before.

பிரதமர் மோடி என்ன செய்கிறார் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆறு வாரங்களில் 67 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி என்ன செய்கிறார் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார். தானே உருவாக்கிய இந்த சுகாதார  நாசத்தில் இருந்து தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, மாநிலங்களின் மீது சுமையை திணித்து   உள்ளார்.

unknown node

தற்போது அனைவருக்கும் இலவச தடுப்பூசி பணியை பிரதமர் மோடி தொடங்கவேண்டும். தொற்றால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏழைகளுக்கு பணமும் உணவு தானியங்கள் வழங்க வேண்டும். சென்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்த வேண்டும். பி.எம் கேர் நிதியை விடுவிக்கவேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ 35,000 கோடி தடுப்பூசிக்கு செலவிடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

unknown node