நீட் தேர்வு எப்போது நடைபெறும்..? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

நீட்நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ மெயின் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கானநீட்நுழைவுத்தேர்வு நாடு முழுதும் மே 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜெ.இ.இ முதன்மைத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், இந்த தேர்வு முதல்கட்டமாக ஜனவரி மாதமும், இரண்டாம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CUET தேர்வு வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.