பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 16 கோடி வேலைகள் எங்கே? மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி.!

பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 16 கோடி வேலைகள் எங்கே என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 16 கோடி வேலைகள் எங்கே என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, 71,000 பேருக்கு மட்டுமே பணி நியமனக் கடிதங்களை விநியோகித்துள்ளதாகவும், தான் வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கான 16 கோடி வேலைவாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைகள் வழங்கப்படும் என்று பிரதமர் அளித்த வாக்குறுதியை அவருக்கு நினைவுபடுத்தி கூறிய கார்கே, மேலும் அரசுத் துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன.

ஆனால் இன்று நீங்கள் வழங்கிய 71,000 பணி நியமனக் கடிதங்கள் மிகக் குறைவு, எட்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்த 16 கோடி வேலைகள் எங்கே என்று இளைஞர்களுக்கு பதில் சொல்லுங்கள், என  மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பினார்.

பிரதமரின் ரோஸ்கர் மேளா இயக்கத்தின் ஒரு பகுதியாக, அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 71,426 நியமனக் கடிதங்களை இன்று பிரதமர் மோடி வழங்கினார். ரோஸ்கர் மேளா திட்டம் நமது அரசாங்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது, என பிரதமர் மேலும் கூறினார்.