உள்நாட்டு சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவது ஏன்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டு, 2 மாதங்களுக்குள் மூன்று முறை தொடர்ச்சியான விலை அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது என்றும் இந்த ஆண்டில் மட்டுமே ரூ.190 உயர்த்தப்பட்டது ஏன் எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச சந்தையில் ஒரு டன் 880 டாலராக இருந்த எரிவாயு விலை தற்போது 650 டாலராக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை 26 சதவீதம் குறைந்த நிலையில், உள்நாட்டில் எரிவாயு விலையை உயர்த்தியது ஏன்? என்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 105 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை தற்போது 71 டாலராக சரிந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதுபோன்று, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியது ஏன்?. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.71.50 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மத்திய பாஜக ஆட்சியில் ரூ.101 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்று காங்கிரஸ் ஆட்சியில் ரூ.57 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, பாஜக ஆட்சியில் ரூ.88 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை 42 சதவீதமும், டீசல் விலை 55 சதவீதமும் உயர்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ளது என சரமாரியாக கேள்வி எழுப்பி, மத்திய அரசை கடுமையாக குற்றசாட்டியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…