மணிப்பூர் விவகாரத்தை குறித்து பிரதமர் மோடி அவையில் பேச தயங்குவது ஏன்? – மல்லிகார்ஜுனே கார்கே

Mallikarjun Kharge

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் இருந்த காரணத்தால் , மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த தீர்மானம் மீதான விவாதம் வரும் 8ஆம் தேதி துவங்க உள்ளது. 10ஆம் தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். அன்றே வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இதற்கிடையில் ஏற்கனவே எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் சென்று  கள நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கூட்டாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். அதன்பின் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அவை தலைவர் ஏற்கவில்லை.

மணிப்பூரில் நாங்கள் நடத்திய ஆய்வு குறித்து அவைகள் தெரிவிக்க அனுமதிக்கவில்லை. மணிப்பூர் விவகாரத்தை குறித்து பிரதமர் மோடி அவையில் பேச தயங்குவது ஏன்? 267 தீர்மானத்தின் படி ஏன் விவாதம் நடத்த தயங்குகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்