மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எந்த உறுதியையும் குடியரசு தலைவர் கொடுக்கவில்லை.! திருமாவளவன் பேட்டி.!

President Droupadi Murmu - VCK Leader Thirumavalavan

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அண்மையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக மணிப்பூர் மாநிலம் சென்றனர். அங்கு மாநிலத்தில் மக்களின் நிலை பற்றி நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு அறிக்கையை தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த சந்திப்பு குறித்து விசிக எம்பி திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை, குடியரசு தலைவர் மாளிகையில் இன்று காலை 11.30க்கு சந்திக்க சென்றோம். 11.45 மணிக்கு எங்களை அவர் சந்தித்தார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கைகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில நிமிடங்கள் எடுத்துரைத்தார். காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசு தலைவர் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.

இது குறித்து பொறுமையாக கேட்டறிந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மட்டுமே தெரிவித்தார். இந்த சந்திப்பு மனநிறைவுடன் இருந்ததாக சொல்ல முடியாது. பரிசீலிக்கிறோம் என்று தான் கூறினார். பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளத்தையும் வலியுறுத்தினோம் என கூறினார்.

மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து குடியரசு தலைவர் எங்களிடம் எந்த உறுதியும் அவர் அளிக்கவில்லை  என விசிக எம்பி திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்