டெல்லியில் ஊரடங்கு நீட்டிப்பா ? முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி அங்கு 41,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மருத்துவக்குழு ஜூலை மாதத்துக்குள் டெல்லியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தது .

இதனால் நேற்று  டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  டெல்லியில் மற்றொரு ஊரடங்கிற்கு திட்டமிடப்படுகிறதா என்று பலர் ஊகிக்கின்றனர். அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

unknown node