பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது என்று எஸ்.பி.பி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்.
எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு துரதிர்ஷ்டவசமானது. எஸ்.பி.பி-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது.
இந்தியா முழுவதும் அவரது இனிமையான குரல் மற்றும் இசை பல தசாப்தங்களாக பார்வையாளர்களை கவர்ந்தது. துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் உள்ளன என்று தெரிவித்து, ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
unknown node