இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை301ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,66,598 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,44,66,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 301 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,64,153 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,134 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,73,890 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.28% ஆக அதிகரிப்பு.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,28,555 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.527 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,13,68,79,685 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 67,82,042 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.