பிடிவாதம், வறட்டு கெளரவம் விட்டு மாணவர்கள் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்- ஸ்டாலின் .!

பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

unknown node

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின்  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு  குறித்து தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்.! முடிவில் மாணவர் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.! என பதிவிட்டுள்ளார்.