முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை

முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், இந்த பரப்பான சூழலில் 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டன. தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பள்ளிகளில் மீதமுள்ள முகக்கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகளை திரும்ப ஒப்படைக்க மாவட்ட அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.