மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி உயிரிழப்பு – தலைவர் கமல்ஹாசன் இரங்கல்.!

கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் மக்கள் நீதி மையம் தலைவர் சுப்பிரமணியன் என்பவர் கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கட்சி நிர்வாகி காலமானதை அடுத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், களத்தில் முன்னிற்கும் என் அன்பிற்கினிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருமான டாக்டர். M. A. S. சுப்பிரமணியன் மறைவு நமக்கும் பேரிழப்பு. நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.