புதுச்சேரியில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு…ரஜினியை பார்க்க திரண்ட ரசிகர்கள்…வைரலாகும் வீடியோ.!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முடிந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக அவருடைய மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், ரஜினி புதுச்சேரியில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் உடனடியாக கிளப்பி ரஜினி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.
அங்கு சென்று ரஜினியை பார்க்க கூட்டமாக ரசிகர்கள் கூடினார்கள். உடனடியாக கேரவனை விட்டு வெளியே வந்த ரஜினியும் தன்னுடைய கைகளை அசைத்து ரசிகர்களை உற்சாக படுத்தினார். அதற்கான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#MoideenBhai from #Lalsalaam
at #Pondicherry ❤️❤️❤️#Jailer | #Rajinikanth | #Rajinikanth???? | #SuperstarRajinikanth | #superstar @rajinikanth | #Thalaivar171 | #MuthuvelPandian | @RIAZtheboss | #superstarSupremacy pic.twitter.com/Wp2OKeXLTV
— Suresh Balaji (@surbalu) June 2, 2023