ஊதியம் வழங்காததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி காலவரையின்றி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி காலவரையின்றி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

unknown node

புதுச்சேரி போக்குவரத்து கழகம் அம்மாநிலம் மட்டும் இல்லாமல் சென்னை, நாகர்கோவில், பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்து சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. ஏற்கவே முடிவு செய்யப்பட்ட கூட்டத்தை அரசு போக்குவரத்து பொது மேலாளரான கிஷோர்குமார் தவிர்த்தர்க்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயங்கப்படவில்லை. மாநில முழுவதும் 100க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடூம் சிறமத்திற்குள்ளாகின.

DINASUVADU