அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1,000 நிதியுதவி அறிவிப்பு.!

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதி நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மக்களுக்கு வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனால், விவசாய கூலி தொழிலாளர்கள், பட்டாசு மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள், நெசவாளர்கள் மீனவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள என என பலர் பாதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டை தார்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே  தமிழக அரசு ரூ. 1000 நிவாரணத் தொகை வழங்கியது.

unknown node

இந்நிலையில், மீண்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக ரூ.83 கோடி ஒதுக்கி அதற்குரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பட்டாசு தொழிலாளர்கள், மீனவர்கள் என 14 வகையான வாரியத்தை சேர்ந்த 8.39 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர்கள்.