காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி.!

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி.

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இன்றைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி.!