பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்.!

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை அறிக்கையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் பிசியோதெரபி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஐசியூவில் உள்ள எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

unknown node