திரு.வி.க நகரில் 210 பேருக்கும் , ராயபுரத்தில் 199 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், நேற்று மட்டும் 161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 48 பேர் கொரோனாவால் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1258 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
unknown nodeசென்னையில், நேற்று மட்டும் 138 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் ராயபுரத்தை மிஞ்சியது திரு.வி.க.நகர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் இருந்த நிலையில், தற்போது திரு.வி.க நகர் முதலிடத்தில் உள்ளது.
திரு.வி.க நகரில் 210 பேருக்கும் , ராயபுரத்தில் 199 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.