ஓம் சிவோஹம்: இளையராஜாவின் பக்தி இசை.., மனமுருகி ரசித்த பிரதமர் மோடி பாராட்டு.!
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில், இசைஞானி இளையராஜா தனது இசை நிகழ்ச்சியின் மூலம் சோழருக்கு மரியாதை செலுத்தினார்.

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், இசைஞானி இளையராஜா தனது இசை நிகழ்ச்சியின் மூலம் சோழருக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் “ஓம் சிவோஹம்” மற்றும் “திருவாசகம்” உள்ளிட்ட தெய்வீகப் பாடல்கள் இசைக்கப்பட்டன, மேலும் இதனை பிரதமர் நரேந்திர மோடி மெய்மறந்து ரசித்தார்.
இசைஞானி இளையராஜாவின் ஆன்மீக இன்னிசை நிகழ்ச்சியில் இளையராஜா முதல் பாடலாக ”ஓம்சிவோகம்” பாடல் மது பாலகிருஷ்ணன் பாட பாட.. பாடலை தாளமிட்டு ரசித்து கேட்ட பிரதமர்… பிரதமர் கைத்தடி ரசத்ததோடு, சில இடங்களில் கண் மூடியும் ரசித்தார்.
இறுதியில், பாடல் முடிந்த அடுத்த நொடியே எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். இதனை கண்டு பூரித்து போய் இளையராஜா கை எடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
Congratulations @ilaiyaraaja #TNWelcomesModi
இசை நிகழ்ச்சி
கங்கைகொண்ட சோழபுரத்தில் இசையாணி இளையராஜா அவர்களின் இசை நிகழ்ச்சியில் ஒலித்த “சிவபெருமான்” பாடல் கேட்டு மகிழ்ந்த ‘விஷ்வகுரு’#TNWelcomesModi
மாமன்னர் இராஜேந்திர சோழன் அவர்களின் பெருமையைப் போற்றும் விதமாக அரியலூரில்… pic.twitter.com/5GOG0xIdYX— K.Ashok adv (@ashok777_kalam) July 27, 2025
பின்னர் மேடையில் பேசிய பிரதமர் மோடி, “சிவ முழக்கத்தை கேட்கும் போது பரவசமாக உள்ளது, இளையராஜாவின் இசையாலும், ஓதுவார்களின் பாடல்களாலும் ஆனந்தமடைந்தேன்” என்று கூறினார்.