தமிழகத்தில் 10,+2 பொதுத்தேர்வு -ஆணையம் ஆலோசனை..!

Chief Election Commissioner Sunil Arora is consulting on the 10th and 12th class public exam in Tamil Nadu.

தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு நேற்று தமிழகம் வந்தனர்.

நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடந்த நிலையில், இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கொடுப்பதை தடுப்பதற்காக  கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை  நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுத்தேர்வும், தேர்தலிலும் ஒரே நேரத்தில் நடக்காமல் தடுப்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.