திருவாரூர் மாவட்டத்தில் 10 பேர் போலி மருத்துவர்கள் கைது!

திருவாரூரில் 10 போலி மருத்துவர்களை கைது செய்து தனிடப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருவாரூரில் 10 போலி மருத்துவர்களை கைது செய்து தனிடப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருவாரூர் மாவட்டத்தில் முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்த 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நடத்திய சோதனையில் தனிடப்படை போலீசார் போலி மருத்துவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுபோன்று, இம்மாதம் தொடக்கத்தில் சேலத்தில், ஒரே நாளில் மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, திருவாரூரில் முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்த 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்த 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

unknown node