100 நாள் வேலை திட்டம் – தமிழ்நாட்டில் ஊதியம் ரூ.294 ஆக உயர்வு!

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு ரூ.294 ஆக வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு ரூ.294 ஆக வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில், குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு ரூ.294 ஆக வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.281-ல் இருந்து ரூ.294-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

மேலும், அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும். 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணி நிறைவு பெற்றதாக கூறினார். திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு காட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்ட்டப்பட்டுள்ளன. இதுபோன்று, 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

நமக்கு நாமே திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.3,000 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்திருந்தார். ஊரக பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் உயர்த்தப்படும். தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.