நெல்லையில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் – முதல்வர் பழனிசாமி

நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். பின்னர் நெல்லையில் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நெல்லை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.நெல்லையில் மிகப்பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கம். நெல்லை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் கூடுதலாக 100 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்ட விவசாயிகள், தொழில் துறையினர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
2021ம் ஆண்டு இறுதிக்குள் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025