புஷ்பா திரைப்பட பாணியில் கேரளாவின் மலப்புரத்தில் இருந்து சென்னைக்கு 1000 கிலோ சந்தனக்கட்டை கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து தமிழகத்தில் சென்னை நோக்கி 1000 கிலோ வரையிலான சந்தனக்கட்டை கடத்தி வந்த டெம்போவை கோவை அருகே வனத்துறை போலீசார் வளைத்து பிடித்து சோதனை நடத்தியுள்ளனர்.
கர்நாடக எண் கொண்ட டெம்போவில் அலமாரி போல் ரகசிய அறை அமைத்து சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அதில் இருந்து சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்தனர் வனத்துறை காவல்துறை. 57 மூட்டைகளில் 1051 கிலோ அளவிலான சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்து, ஓட்டுநரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
