ஒரே நாளில் 107 பேர் உயிரிழப்பு – தமிழகத்தில் கொரோனாவின் நிலை!

In the last 24 hours alone, 107 people have died due to corona in Tamil Nadu and more than 17,000 new cases have been reported.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 107 பேர் உயிரிழந்துள்ளதுடன், புதிதாக 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,858 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 107 பேர் உயிரிழந்துள்ளனர். 15,542 பேர் இன்று  மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 6.93 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13,933 பேர் தமிழகம் முழுவதிலும் உயிரிழந்து உள்ளனர்.