மழை காரணமாக தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை !

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு மழை என்பது மிகவும் குறைந்த அளவே மழை பெய்தது . ஆனால் தற்போது  மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று

unknown node

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு மழை என்பது மிகவும் குறைந்த அளவே மழை பெய்தது . ஆனால் தற்போது  மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, புதுவை, காரைக்கால், திருவாரூர், மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடபட்டுள்ளது. கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமராதபும் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் பள்ளிளுக்கு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

unknown node

தமிழகத்தில் நேற்று தீவிரமடைந்த பருவமழை இடைவிடாது விடிய விடிய கொட்டி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல் கடலூர், கும்பகோணம், திருவிடைமருதூரிலும் விடிய  விடியமழை  பெய்து வருகிறது. இந்நிலையில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மழை காரணமாக தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை !