தமிழ்நாட்டுக்கு மேலும் 11 புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்றவற்றுடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும்.
மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்டங்கள், மார்தாண்டம் தேன், மயிலாடி கற்சிற்பம், ஊட்டி வறுக்கி, ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி, உள்ளிட்ட11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதனால், புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.